விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் முகாம் நிரல் (சென்னை) மற்ற ஊர்களில்... விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

விண்ணப்பித்தல்

  1. தயவுசெய்து விபஸ்ஸனா தியான முறை பற்றியும், ஒழுக்க நெறி பற்றியும் கவனத்துடன் படித்து அறியவும்

  2. நீங்கள் இணையம் மூலம் நேரிடையாக இங்கே விண்ணப்பிக்கலாம்.

  3. அல்லது, விண்ணப்பப் படிவத்தை (PDF கோப்பு) அச்செடுத்து முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.

    உங்களைத் தொடர்பு கொள்ள நீங்கள் அளித்திருக்கும் முகவரியை மீண்டும் சரிபார்க்கவும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மைய முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அல்லது அதில் கேட்டுள்ள விவரங்களை info@setu.dhamma.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.

விண்ணப்பத்தில் கேட்டிருப்பனவற்றுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள் முழுமையானதாகவும், விவரமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். நீங்கள் அளிக்கும் பதில்கள் எவருக்கும் வெளியிடப்படமாட்டாது. நீங்கள் விண்ணப்பம் அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் முகாம் அமைப்பாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பம் வந்து சேர்ந்ததா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயிற்சியில் இடம் உறுதியானால், அதற்கான கடிதம் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். பயிற்சி துவங்கும் நாள் அன்றே நீங்கள் மையத்திற்கு வர வேண்டும்.

மேலே செல்க